

இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கி பிரச்சனைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று நேரடியாக முன்வைத்தார்.
குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் கல்வி பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். அரசாங்க துறைகளில் இந்தியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன் வைத்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இல்லத்தில் இன்று மனித வள அமைச்சர் சிவகுமார் தலைமையில் இந்திய எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கோவில் தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனீஸ்வரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், , சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து சமுதாயத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் மனித வள அமைச்சர் சிவகுமார் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

