பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார் டத்தோ ரெனா இராமலிங்கம்!

பினாங்கு, பிப் 1-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு நேற்று உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த திருநாளில் லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம் அவர்கள் தமது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

பினாங்கு பால தண்டாயுதபாணி கோவில் அருகே அமைந்துள்ள தமது இல்லத்தில் டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்த நாள் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜா அவர்கள் நேரடி வருகை தந்து டத்தோ ரெனா இராமலிங்கத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான் ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா நாகசுந்தரம், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ரெனா நாகரத்தினம் பிள்ளை ,டத்தோஸ்ரீ புலேந்திரன், சென்னை சீல்க் நிறுவனத்தின் உரிமையாளர் தனசேகரன் , ஐசேக் உட்பட பலரும் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles