ஈப்போ தைப்பூசத் தில் மாண்புமிகு டாக்டர் சிவகுமார் பக்தர்களுக்கு சுவையான உணவுகளை வழங்கினார்!

ஈப்போ, பிப் 1-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு நேற்று உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் மலேசியாவில் புகழ்பெற்ற ஈப்போ கல்லுமலை முருகன் கோவிலில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் தாகம் தீர்க்க குளிர்பானங்கள் மற்றும் சுவையான உணவுகளை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவகுமார் வழங்கி உபசரித்தார்.

பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மாண்புமிகு சிவகுமார் அன்னதானம் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles