
சிலாங்கூர் ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் வைபவம் இவ்வாண்டு 18 ம் ஆண்டாக பத்துமலை தைப்பூச விழாவில் தொடர்ந்தது. கடந்த 2009ம் ஆண்டு பக்காத்தான் ராயாட் ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெறும், இந்நிகழ்வினை அன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பத்து மலை அடிவாரத்தில் பந்தல் அமைத்து ஆலயங்களுக்கு மானியம் வழங்குவதை ஆண்டு நிகழ்வாக நடத்தினார்.

அதன்பின் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இருந்த வீ. கணபதி ராவ் தொடர்ந்தார். இம்முறை மாண்புமிகு பாப்பா ராய்டு மேலும் மாநில அரசாங்கத்தின் அதிக ஒதுக்கீடுகள் பெற்று, பக்தர்களுக்கு அன்னதானத்துடன் ஆண்டு மானியமும் வழங்கி வருகிறார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டுவின் உரைக்கு பின்னர் மானியம் வழங்கும் வருடாந்திர நிகழ்வு தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாக மானியம் பெற்ற சில ஆலயங்கள் தெரிவித்தது.
நிகழ்வில் தலைமையேற்று மந்திரி புசார் டத்தோ அமிருடினுடன், செலாயாங் நகராண்மைக் கழக தலைவர், கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானியம் பெற்றுக் கொண்ட ஆலயங்களின் தலைவர்கள் மாநில மந்திரி புசார் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராயுடுவுக்கு தங்கள் பாராட்டையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

