டான்ஸ்ரீ நடராஜா பேத்தி திருமண வைபவம் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் பிப் 22-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா அவர்களின்
பேத்தி திருமண வைபவம் இன்று பத்துமலை திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட மல்டி பெர்பெர்ஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விமரிசையாக நடைபெற்றது.

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தம்பதியர், ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தம்பதியர், டத்தோ டி.மோகன் தம்பதியர் ,டான்ஶ்ரீ பாலன், டத்தோ டாக்டர் கு செல்வராஜ், மிம்தா பொருளாளர் பன்னீர், டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், லபோ அம்பாங் ராஜன்,
எம்ஜிஆரால் அரசியல் அறிமுகம் பெற்று பின்னர் கலைஞரின் அரசியல் படைத் தளத்தில் இணைந்து தற்பொழுது தமிழ்நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரியவரும் கலைஞர் பெருமகனாரால் ஆழ்வார் என்று அழைக்கப்பட்டு வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட மலையக – தமிழக அரசியல் தலைவர்களும் ஆன்மீக சான்றோரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமான உறவினரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன், மேனாள் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கு. தேவேந்திரன், மூத்த புகைப்பட கலைஞர் பி மலையாண்டி உள்ளிட்ட பத்திரிகை வட்டத்தினரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles