


கோலாலம்பூர் பிப் 23-
நாடு முழுவதும் பொது, மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலை வாய்ப்பு சந்தையை மேம்படுத்துவும் தி செயல்படுத்தவும் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று அறிவித்தார்.
இந்த முன்முயற்சிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (Perkeso) வழியாக நாடு முழுவதும் உள்ள 400 உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் என்றார்.
இன்று கோலாலம்பூர் நூ சென்ட்ரலில் (Nu Sentral) ‘MyFutureJobs’ தொழில் ஆய்வு மையத்தை (MYCEC) தொடங்கி வைத்துப் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
“பல்கலைக்கழக மாணவர்களிடையே டிஜிட்டல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு MyFutureJobs ஒரு முக்கிய சக்தியாக செயல்படும்.
தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலத் தொழில் பாதையை தொலைநோக்கு ரீதியாகத் திட்டமிடவும் வழிகாட்டவும் உயர்கல்வி அமைச்சுடன் மனிதவள அமைச்சு நெருக்கமாகப் பணியாற்றும் என்றார் .
இந்த நிகழ்வில் சொக்சோ தலைவர் டத்தோஸ்ரீ சுபா ஹாகன் கமல், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

