
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு மலேசிய பியோன் மலேசியா கல்வி நிறுவனம் வழிகாட்டுகிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ண குமார் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் யூபியூ விண்ணப்பம் வரும் மார்ச் 23ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
இதன் அடிப்படையில் எஸ்பிஎம், எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்கில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 10.30 மணி முதல் இது தொடர்பான இலவச விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
முதலில் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் பின் எஸ்டிபிஎம் உட்பட மற்ற மாணவர்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்படும். ஸூம் வாயிலாக நடைபெறும் இந்த விளக்கக் கூட்டத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
உயர் கல்வியமைச்சின் அதிகாரி பத்மராஜா இந்த விளக்கக் கூட்டத்தில் உரிய விளக்கங்களை தரவுள்ளார்.
ஆகவே இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்விளக்கக் கூட்டம் குறித்த மேல்விரங்களுக்கு @beyondeducationmalaysia எனும் சமூக ஊடக பக்கங்களை மாணவர்கள் வலம் வரலாம் என்று விக்னேஷ் கேட்டுக் கொண்டார்.

