
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான விவாகரத்து சர்ச்சை என்பது கடந்த வாரத்தில் இருந்து பேசு பொருளாக உள்ளது. இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து ஒரே காரில் வந்து, ஜோடியாக வந்தனர்.
இது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்தும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு ஏப்.20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் ‘கள்ள உறவு’ இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தது பெரும் சர்ச்சையான நிலையில், சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துகொண்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விஜய் – திரிஷாவை குறிப்பிட்டு அண்மையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்

