பல்கலைக்கழக மாணவர்களின் வீரமும் விளையாட்டு திறனும் ஒன்றிணையும் இடையக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி “மாவீரன் 3.0”

பாங்கி, மார்ச் 12 – மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம் (PMI UKM) மற்றும் UKM கபடி கழகம் இணைந்து “மாவீரன் 3.0” எனப்படும் இடையக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இடம்பெறும் முக்கிய விளையாட்டுகள் பின்வருமாறு:

  • கபடி
  • கால்பந்து
  • பூப்பந்து

பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதே இவ்விளையாட்டு போட்டியின் முக்கிய நோக்கமாகும். மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடத்த நிதி ஆதரவும் அனுசரணையும் மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே, எங்கள் முயற்சிக்கு தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் மேலும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவெனில், நிதி ஆதரவு செய்ய முன்வருகிறவர்களுக்கு Universiti Kebangsaan Malaysia (UKM) அங்கீகரித்த வரி விலக்கு (Tax Exemption) வழங்கப்படும்.
நன்றி.

கீர்த்திகன் மகாலிங்கம்
இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம் (PMI UKM)
நிகழ்ச்சி தலைவர் – பியாலா வர்சிட்டி மாவீரன் 3.0
தொலைபேசி: 014-6070331

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles