மலேசிய இளைஞர்கள் திறமையை மேம்படுத்தவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும்
Carsome Academy முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது!
மனித வள அமைச்சர் வ.சிவகுமார் பெருமிதம்

Carsome Academy ஜனவரி 2021 இல் நிறுவப்பட்டது. இந்த அகாடமி இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ளது.
.
CAR இ-காமர்ஸ் தளமான Carsome, நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் மனித மூலதனச் சூழலை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் நோக்கத்தை மேலும் ஆதரிக்கும் வகையில்
உள்ளது.

அதன் Carsome அகாடமியின் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகள் (TVET) தொழில் திறன் பயிற்சிகளை மேலும் உயர்த்தும் வகையில் இருப்பதாக
Carsome இணை நிறுவனரும் Carsome அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான Jiun Ee Teoh தெரிவித்தார்.

Carsome Academy நிறுவனம் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை உலகத் தரத்திலான திறமையாளர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பங்களிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.

இதனிடையே கார்சோம் அகாடமி நிறுவன தலைமையகத்திற்கு வருகை புரிந்த மனித வள அமைச்சர் வ சிவகுமாருக்கு அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.

Carsome Academy மலேசிய இளைஞர்கள் திறமையை மேம்படுத்தவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் உறுதியான வாய்ப்புகளை அணுக முடியும்,” என்று நம்பிக்கை பிறந்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மலேசியாவின் முதல் ‘tech unicorn என்ற முறையில் கார்சோமின் சாதனைகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை.

நாட்டில் வாகனம் வாங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அவர்களின் முயற்சி பல்வேறு புதிய வேலைகள் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது.

“நமது நாட்டு இளைஞர்கள் வாகனத் துறையில் திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றிய கார்சோமின் சிந்தனையில் உருவான கார்சோம் அகாடமியால் தாம் ஆர்வமாக இருக்கிறேன்.

நாட்டில் TVET நிறுவனங்களை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இது பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles