
மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கும் வகையில் மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் நியூரோ-ரோபோடிக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையும் பயிற்சியும் பெற அதிகளவில் மாற்று திறனாளிகள் முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்காக அமைக்கப்பட்ட சிகிச்சை மையமாகும்.
மாற்று திறனாளிகளுக்கு புதிய நம்பிக்கையும் மறு உட் வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த மையத்தில் சிகிச்சையும் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தற்போது 65 கோடியே 40 லட்சம் வெள்ளியில் பேராக் ஈப்போ ஜெலாபாங் பண்டார் மேரு ராயாவில் கட்டப்பட்டு வரும் தேசிய நரம்பியல் நியூரோ- சைபர்னிக்ஸ் ரோபோடிக் புனர் வாழ்வு மையம் அடுத்த ஆண்டில் பூர்த்தி அடையும் வேளையில் உலகம் மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய புனர் வாழ்வு மையமாக விளங்கலாம் என்றார் அவர்.
இதேபோன்ற ஒரு நியூரோ-ரோபோடிக் புனர்வாழ்வு மையம் மலாக்கா மாநிலத்தில் உள்ளது. இதில் 700 க்கும் மேற்பட்டோர் பயிற்சியும் சிகிச்சையும் பெற்று வருகிறார்கள்.
இந்த புனர்வாழ்வு சிகிச்சை மையங்கள் மாற்று திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆகவே மாற்றுத் திறனாளிகள் இந்த மையங்களில் சிகிச்சையும் பயிற்சியும் பெற அதிகளவில் முன் வந்தால் அவர்களுக்கு உதவ சொக்சோ நிறுவனம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்

