அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்!
மனித வள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் நேரடி கலந்துரையாடல் நிகழ்வு நேற்று லேக் கிளப்பில் நடைபெற்றது.

மனித வள அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதனால் இந்த நேரடி கேள்வி பதில் கூட்டத்திற்கு போக வேண்டாம்.

அப்படி போனால் பல கேள்விகள் எழுப்பப்படும். அது உங்களுக்கு பிரச்சனைதான் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள்.

இந்த கூட்டத்திற்கு சென்றால்தான் இந்திய வர்த்தகர்களின் பிரச்சினைகளை என்னால் கண்டறிய முடியும்.

நான் தனியாக போனால் தான் பிரச்சினை. அதனால்தான் மனிதவள அமைச்சின் கீழ் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் இங்கு வந்துள்ளேன்.

எனக்கு தெரிந்த பதில்களை நான் தருகிறேன். தெரியாததை என் அதிகாரிகள் தருவார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்திய வர்த்தகர்களின் பிரச்சினைகளை என்னென்ன என்பதை கண்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கமாக உள்ளது என்று சிவகுமார் கூறினார்.

மேலும் இந்த இரண்டு மாதங்களில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதாக அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

நாட்டின் நிலவி வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஒற்றுமை அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில்தான் ஐந்து முக்கிய தொழில்துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி மூன்று நாட்களில் வழங்கப்பட்டது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles