

முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடைகள் உட்பட பல இந்திய துறைகள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மரணப் படுக்கையில் இருக்கிறது என்று புகார்கள் பலமாக முன் வைக்கப்பட்டன.
இப்போதைக்கு ஐந்து முக்கிய துறைகளுக்கு மட்டுமே அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது..
ஆனால் முடித்திருத்தும் நிலையங்கள், டைக்ஸ்டைல்ஸ், நகைக் கடைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி முடக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட அமைப்பு கள் மனித வள அமைச்சர் சிவகுமாரிடம் முறையிட்டன.
நாங்கள் எல்லாம் மரணப் படுக்கையில் இருக்கிறோம். அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு அனுமதி வழங்கினால் உயிர் பிழைப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் முன் வைத்த குறைகளை கேட்டறிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் கண்டிப்பாக உங்களுக்கு உதவி புரிவேன் என்று உறுதிமொழி வழங்கினார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்வில் மனித வள அமைச்சர் வ சிவகுமார், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மான், எச்ஆர்டிஎப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஆகியோர் நேரடி கேள்விகளுக்கு பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

