லோரி ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்

சாலைகளில் லோரிகளை உட்படுத்திய விபத்துகளை குறைக்க அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சினை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டும்.

அபாட் எனப்படும் தரை போக்குவரத்து இலாகாவின் மூலம் அரசாங்கம் இந்த பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த பயிற்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

இது போன்ற பாதுகாப்பு பயிற்சிகளில் லோரி ஓட்டுனர்கள் நேரடியாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என
பல்ஸ் எனப்படும் தீபகற்ப மலேசியாவிற்கான லோஜிஸ்டிக் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் புவனேஷ் சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுனர்கள் நேரடியாக பயிற்சி பட்டறைகளில் கலந்துக் கொண்டால் இன்னும் கூடுதலான தகவல்களை அவர்கள் பெற முடியும்.

இதன் மூலம் ஓட்டுனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை நேரடியாக பெறுவதோடு சாலைகளில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முடியும் என அரசு இலாகாக்களுடன் பல்ஸ் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புவனேஷ் கூறினார்.

இதற்கிடையில், இத்துறையைச் சேர்ந்த வெளிநாட்டினர்களின் சேவைகள் மிகவும் விலை குறைவாகப் வழங்கப்படுவதால் உள்நாட்டினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.

இந்த பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து பல்ஸ் அதன் முழு செலவுகளை ஏற்று நடத்த தயாராக உள்ளது.

இதனால், ஓட்டுனர்களின் கவனக் குறைவினால் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கட்டங் கட்டமாக குறைக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் புவனேஷ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles