

கடுமையான இனிப்பு நீரால் பாதிக்கப்பட்டு வலது காலை இழந்த ஜான்சி ராணி என்ற இந்திய பெண்மணிக்கு இன்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் மூலம் புதிய விடிவுகாலம் பிறந்தது.
ஜகார்த்தாவில் இருந்து நாடு திரும்பியதும்
கிள்ளான் தாமான் சொந்தோசாவைச் சேர்ந்த ஜான்சி ராணி இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கிள்ளானைச் சேர்ந்த சொக்ஙோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் மூலம் ஜான்சி ராணிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டதோடு சங்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.
மேலும் சொக்சோ சமூகநல பாதுகாப்பு புனர் வாழ்வு மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி பெறவும் இவருக்கு உறுதி கடிதம் வழங்கப்பட்டது.
இடது காலை இழந்ததால் உற்சாகத்தை இழந்த ஜான்சி ராணி இனிமேல் சொக்சோ உதவிகளோடு அனைத்து சலுகைகளையும் பெற்று பழைய நிலைக்கு திரும்புவார் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலாக்காவில் சொக்சோ மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு city link express நிறுவனம் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிவகுமார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இன்று ஜான்சி ராணி இல்லத்திற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் வருகை புரிந்த போது சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உடன் இருந்தார்.
தக்க நேரத்தில் தன் இல்லம் தேடி வந்து உதவிகளை வழங்கிய மனித வள அமைச்சர் சிவகுமாருக்கும் சொக்சோ நிறுவனத்திற்கும் ஜான்சி ராணி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

