


இந்தோனேசியா வீட்டுப் பணிப்பெண்களை மிகவும் நியாயமான கட்டணத்தில் பணியமர்த்துவதற்கான செலவை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆட்சேர்ப்புச் செலவைக் குறைப்பது குறித்து ஜகார்த்தாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தற்போது, குறைந்தபட்ச அளவில் விலைகளை நிர்ணயிக்கும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, முதலாளிகள் செலுத்தும் கட்டணங்கள் (செலவு) மிகவும் அதிகமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண முடியுமா, செலவை குறைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும் என்றார்.
கடந்த நவம்பர் 2022 இல் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 12,000 வெள்ளியுடன் ஒப்பிடும்போது, 3,000 வெள்ளி தனிமைப்படுத்தப்பட்ட செலவை உள்ளடக்கிய செலவை 9,000 வெள்ளியாக குறைக்க முடியும் என்று நம்புவதாக ஜகார்த்தாவில் மலேசிய பத்திரிகையாளர்களிடம் பேசும் போது மனித வள அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.
இதனிடையே
இந்தோ. தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செயல் முறையை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் குறித்து
இந்தோ.அரசுடன்
மனித வள அமைச்சர்
வ சிவகுமார் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தோனேசியா குடியரசின் மனிதவள அமைச்சர் Ida Fauziyah தலைமையிலான பேராளர் குழுவுடன் மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் மனித வள அமைச்சின் அதிகாரிகள் சமூகமான முறையில் பேச்சு வார்த்தையை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

