டூரியான் துங்காலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்!விசாரணை குறித்து ஏ ஜி. விளக்கம் அளிக்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் கோரிக்கை

கோலாலம்பூர் ஏப் 22-
மலாக்கா டூரியான் துங்காலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை குறித்து அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒலிப்பதிவுகள் உட்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பொது நலன் சார்ந்த விஷயம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பதில்களையும் நீதியையும் பெறத் தகுதியுடையவர்கள்.

எனவே, விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்குமாறும்,

இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அப்படியானால் எப்போது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்குமாறும் சட்டத்துறைத் தலைவரை அதிபரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles