
கோலாலம்பூர் மே 15-
நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான ஒரு மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாக, மலேசிய கால்பந்து ரசிகர்கள் 2026 ஃபிஃபா உலகக் கிண்ண 104 ஆட்டங்களை ஒளிபரப்பையும் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM), யூனிஃபை டிவி மூலம் கண்டு மகிழலாம் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
யூனிஃபை, செல்காம் டிஜி, யூ மொபைல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஒத்துழைப்பு, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் செலவின்றி தரமான உள்ளடக்கத்தை வழங்குவதில் பொது ஒளிபரப்பின் பங்கையும் வலுப்படுத்துகிறது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் கூறினார்.
“தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது ஒளிபரப்பு நிலையமான RTM, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான யூனிஃபை, செல்காம் டிஜி, யூ மொபைல் ஆகியவற்றுடன் ஓர் புரிந்துணர்வு ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்று அவர் சொன்னார்

