Jinjang Sri Aman PPR குடியிருப்பாளர்களுடன் வாடகைப் பாக்கியைக் கையாள்வது குறித்த கலந்துரையாடல் அமர்வு!

கோலாலம்பூர் மே 15-
PPP சிகாம்பூட் மற்றும் PPP கெப்போங் ஆகிய அமைப்புகளும் கோலாலம்பூர் மாநகராட்சியும் (DBKL) இணைந்து, Jinjang Sri Aman PPR குடியிருப்பாளர்களுடன் வாடகைப் பாக்கி மேலாண்மை குறித்த கலந்துரையாடல் அமர்வை நேற்று இரவு PPR Sri Aman மண்டபத்தில் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில், DBKL நகர்ப்புற நல்வாழ்வு சமூக மேம்பாட்டுத் துறையின் துணை துணை இயக்குநர் அஹ்மத் இப்னு ,பிபிபி கூட்டரசு பிரதேசத்தின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி சிகாம்புட் பிரிவின் தலைவர் டத்தோ வினோத், பிபிபி கெப்போங் பிரிவின் தலைவர் எல். ராஜேந்திரன், பிபிபி பத்து பிரிவின் தலைவர் ஜே.கே. மகேந்திரன், அத்துடன் பிபிபி மகளிர் பிரிவின் தலைவர் திருமதி நளினி மற்றும் பிபிபி தகவல் பிரிவின் தலைவர் முகமது ரிட்ஜுவான் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமூக மேம்பாடு மற்றும் நகர்ப்புற நலவாழ்வுத் துறையின் இயக்குநர் துவான் கைருல் அனுவார் முகமது ஜூரிக்கு சத்யா சுதாகரன் தனது பாராட்டையும் தெரிவித்தார்.

DBKL தரவுகளின்படி, கோலாலம்பூரில் உள்ள PA/PPR வீடுகள் தொடர்பான மொத்த வாடகைப் பாக்கித் தொகை தற்போது RM70 மில்லியனை எட்டியுள்ளது.

இந்த நிலைமை அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சுமையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் PPR Sri Aman குடியிருப்பாளர்கள் தங்களது வாடகை கட்டணத்தை படிப்படியாக கட்டுவதற்கு ஏதுவாக இந்த விளக்க கூட்டம் சுமூகமாக நடைபெற்றது என்று சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வருமானம் பாதிப்பால் பல குடும்பங்கள் தங்களது வாடகை கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர்.

அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ராவுக்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு இந்த மித்ரா நிதி மூலம் உதவி செய்யலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

குடியிருப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வாடகை கட்டணத்தை செலுத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles