ம இகா கட்சியின் 80 ஆம் ஆண்டு விழா!மே 21 இல் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

மா.பவளம்

கோலாலம்பூர் மே 15-
மஇகா தொடங்கப்பட்டு தற்போது 80 ஆண்டுகள் நிறைவை அமைந்துள்ளது.

அந்த வகையில் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மஇகா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளது.

குறிப்பாக 9 திட்டங்களின் வாயிலாக இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.

முதலாவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்தான் இந்த மஇகா கட்சி தொடங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வரும் மே 21ஆம் தேதி அவ்வாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது என்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதே போன்று நாடு முழுவதும் கூட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படும்.

மஇகாவில் கிறிஸ்துவர்களும் முஸ்லிம் அன்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் அவர்களின் வழியிலும் பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.

மஇகா உறுப்பினர்களின் குடும்ப தின விழா நாடு முழுவதும் நடத்தப்படும்.

மேலும் மருத்துவ முகாம், ரத்த தானம், புற்றுநோய் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

கால்பந்து, கபடி, பூப்பந்து என விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளும் நடத்தப்படும்.

பேச்சு போட்டியுடன் மக்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். உச்சக்கட்டமாக மாபெரும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படும்.

மஇகா 80 ஆண்டுகாலமாக இந்த நாட்டிலேயே இந்தியர்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles