Malaysian United Party கட்சியின் பொறுப்பை ரபிசி ரம்லி, நிக் நஸ்மி நிக் ஏற்கிறார்கள்!

பெட்டாலிங் ஜெயா, மே 17-
Malaysia United Party எனப்படும்
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிஸி ரம்லி மற்றும் நிக் நம்ஸ்மியும் ஏற்கிறார்கள்.

தமக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கும் ஒரு புதிய அரசியல் திசையை வகுக்கும் முயற்சியாக அவர்கள் இம் முடிவை எடுத்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயாவில் 2,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில், மலேசிய ஐக்கிய கட்சியின் நிறுவனரும் தலைவருமான டான் ஜின் தீம் இன்று ரபிசி, நிக் நஸ்மிக்கு கட்சியின் பதிவுச் சான்றிதழை அடையாளப் பூர்வமாக வழங்கினார்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவராகவும் உள்ள ரபிசி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த வழியைத் தேடுவதாகக் கூறிய ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே, ஏற்கனவே உள்ள ஒரு கட்சியைப் பொறுப்பேற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மலேசிய ஐக்கிய கட்சி 2016/டிசம்பர் 2ஆம் தேதி பினாங்கில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது .

அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சி தேர்தலில் ரபிஸி ரம்லியின் ஆதரவாளர்கள் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles