சூரியனை பிளந்து சென்ற விமானம்: 17 லட்சம் முயற்சிகளுக்கு பின் கிடைத்த நூற்றாண்டின் சிறந்த படம்

விண்வெளியில் நடக்கும் விசித்திரங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விண்வெளி புகைப்படக் கலைஞர் (Astrophotography) ஆண்ட்ரூ மெக்கார்த்தி, தனது வாழ்நாளின் ஆகச்சிறந்த, அதிர்ஷ்டகரமான புகைப்படத்தை எடுத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நெருப்பாய் கொதிக்கும் சூரியனின் மையப்பகுதியை, பிரம்மாண்ட விமானம் நேர்க்கோட்டில் கடந்து செல்லும் மிரட்டலான காட்சிதான் அது.

தற்போது இணையத்தைக் கலக்கி வரும் இந்த ஒற்றைப் புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உழைப்பும், அதிர்ஷ்டமும் பார்ப்போரை வாயடைக்க வைக்கிறது.

சூரியனுக்குக் குறுக்கே விமானம் பறப்பது 1 நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிடும் ஒரு நிகழ்வு. கண்சிமிட்டும் நேரத்தில் நடக்கும் இந்த அதிசயத்தைப் பிடிக்க மெக்கார்த்தி சாதாரண முயற்சி செய்யவில்லை.

விமானத்தின் வேகம், அது செல்லும் பாதை, சூரியனின் நகர்வு, வானிலை என அனைத்தையும் கணிப்பொறி மூலம் துல்லியமாகக் கணக்கிட்டு, சுமார் 6 நாட்கள் விடிய விடியக் காத்திருந்தார்.

இறுதியாக, 1.7 மில்லியன் (அதாவது 17 லட்சம்) புகைப்படங்களை எடுத்த பிறகுதான், அவர் எதிர்பார்த்த அந்த ஒரு ‘மேஜிக் ஃபிரேம்’ அவருக்குக் கிடைத்தது.

சூரியனுக்கு முன்னால் விமானம் செல்லும் இந்த அதிசய காட்சியைப் பிடிக்க, 6 நாட்களில் 17 லட்சம் புகைப்படங்களை எடுக்க வேண்டியிருந்தது என மெக்கார்த்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் இவ்வளவு வைரலாவதற்குப் பின்னால் இயற்கையின் பேரதிசயமும் ஒளிந்திருக்கிறது. விமானம் சூரியனை சரியாகக் கடந்த அதே மில்டி செகண்டில், சூரியனின் மேற்பரப்பில் இருந்து 2 பிரம்மாண்டமான ‘சூரியப் புடைப்புகள்’ (Solar Prominences) வளைந்து விண்வெளியில் மிதந்தன.

சூரிய புடைப்புகள் என்பது கோடிக்கணக்கான டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் பிளாஸ்மா வாயுக்களின் பிரமாண்ட வளைவுகளாகும்.

விமானம் கடந்த அதே நொடியில், அந்த 2 சூரியப் புடைப்புகளும் கேமராவில் சிக்கியது என் வாழ்நாளின் ஆகப்பெரும் அதிர்ஷ்டம்.

இது நான் எடுத்ததிலேயே மிகச்சிறந்த புகைப்படம் என்கிறார் மெக்கார்த்தி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles