
கோலாலம்பூர் மே 18-
வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட பக்கத்தான் ஹராப்பான் தயார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பினாங்கு, பகாங், ஜொகூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தனது அரசியல் வியூகம் குறித்து பல மாதங்களாக விவாதித்து வருகிறது.
மேலும் மற்ற கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தால், உறுதியான பதிலடி கொடுக்கும்.
மற்ற கட்சிகள் மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்தால், அதே வழியில் பதிலளிப்பதைத் தவிர நம்பிக்கை கூட்டணிக்கு வேறு வழியில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்

