LIGa PENALTIPiala President PPP ! அல்டிமேட் கிளப் 5,000 வெள்ளி ரொக்கத்தை தட்டிச் சென்றது

செமினி, மே 18-
உலுலங்காட் தொகுதி பிபிபி ஆதரவோடு ரிஞ்சிங் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப் மற்றும் காசே இக்லாஸ் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் LIGa PENALTI
Piala President PPP ! போட்டி நேற்று 17-5-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செமினி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பத்தாயிரம் வெள்ளி ரொக்கப் பரிசு கொண்ட இந்த போட்டியில் மொத்தம் 68 குழுக்கள் பங்கேற்றது.இதில் அல்டிமேட் கிளப் சாம்பியன் பட்டத்தையும் 5,000 வெள்ளி ரொக்கப் தை தட்டிச் சென்றது.

ஆர்ஆர் எஃப்சி கிளப் இரண்டாம் இடத்தைப் பிடித்தது 2,000 வெள்ளி ரொக்கத்தை வென்றது.என்.எம்.டி. கிளப் 3ஆவது இடத்தை பிடித்து 1,000 வெள்ளியும் அமாண்டா கிளப் 4ஆவது இடத்தை பிடித்து 500 வெள்ளி ரொக்கத்தை வென்றது.

ஐந்து முதல் எட்டு இடங்கள் பிடித்த குழுக்களுக்கு தலா 100 வெள்ளி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதி ஆட்டங்களை காண சிறப்பு வருகை தந்த பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலாவுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.பின்னர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

குறுகிய காலத்தில் இந்த போட்டியை சிறப்பாக நடத்தி காட்டிய டாக்டர் சுரேந்திரன் உட்பட போட்டி ஏற்பாட்டுக் குழுவினரை அவர் வெகுவாக பாராட்டினார்.

இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் மூலம் இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காண உதவும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இதனிடையே போட்டி வெற்றி பெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் டாக்டர் சுரேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles