சிலி நாட்டின் மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்!

கோலாலம்பூர் மே 18-
இஸ்தானா நெகராவில் நடைபெற்ற விழாவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் அவர்கள் மொத்தம் 15 வெளிநாட்டு மலேசியத் தூதர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

இதில் Suresh Kumar K. Rengasamy அவர்கள் Chile நாட்டின் மலேசிய தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ஷசிலி நாட்டின் மலேசியத் தூதராக நியமனம் செய்யப்பட்ட சுரேஸ் குமார் கடந்த 2000 ஆம் ஆண்டில் மலேசிய சிவில் செர்விஸ் துறையில் பணியில் அமர்ந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் அரசியல் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றார்.

மலேசிய வெளியுறவு அமைச்சின் துறையில் பல ஆண்டுகாலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.தனது தூதரக பணியின் ஆரம்ப ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் துணை இயக்குனர் பதவியும் வகித்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு கனடா நாட்டின் இணை தூதராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் விஸ்மா புத்ராவில் தனது பணியை சிறப்பாக செய்தார்.

இப்போது சிலி நாட்டின் மலேசிய தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles