ஏமாந்தது போதும் இனியும் இந்திய சமுதாயம் ஏமாற வேண்டாம்! டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்

கோலாலம்பூர் மே 19-
இந்நாட்டில் இந்திய சமுதாயம் பலமுறை ஏமாந்து விட்டது.
இனியும் ஏமாற வேண்டாம்.இந்திய சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டில் இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஒரு புரட்சி ஏற்பட்டது.

இந்த புரட்சியால் இந்திய சமுதாயம் துன் டாக்டர் சாமிவேலுவை இழந்தது.மேலும் இந்திய சமுதாயம் ம இகாவை கைவிட்டது.

இருப்பினும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி ஏற்ற பிறகு இந்திய சமுதாயத்திற்கு பல நல்ல காரியங்கள் நடந்தது. அவரின் ஆட்சியில் நானும் துணை அமைச்சராக இருந்திருக்கிறேன்.

இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பல திட்டங்களை வகுத்தார்.ஆனால் அவரையும் இந்திய சமுதாயம் கைவிட்டது.

துன் சாமிவேலு காலத்தில் இந்திய சமுதாயத்திற்காக எய்ம்ஸ் பல்கலைககழகத்தை உருவாக்கினார். அவரையும் இந்திய சமுதாயம் கைவிட்டது.

இறுதியில் எம்ஜிஆர்யை நம்பிய இந்திய சமுதாயத்திற்கு நம்பியார் வந்து விட்டார்.

இப்போது புதிதாக வந்திருக்கும் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒருவர் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு இவர் மற்றொருவர் ஆட்சியில் அமர வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

இப்போது அவரை கைவிட்டு விட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்.

இவரை நம்பியும் சமுக வலைதளங்களில் பேசிக் கொண்டிருப்பவர்களை நம்பி இந்திய சமுதாயம் இனியும் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles