
லண்டன் மே 20-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இம்முறை அர்செனல் கிண்ணத்தை வென்று வரலாறு படைக்கிறது
இன்று அதிகாலை நடைபெற்ற 37 ஆவது ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1-1 என்ற கோல் கணக்கில் போர்னிமோர்த் கிளப்பிடம் டிரா ஆனது.
இதனால் 37 ஆட்டங்கள் முடிவில் மென்செஸ்டர் சிட்டி 78 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.
37 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இன்னும் ஒரு ஆட்டமே உள்ளது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அர்செனல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்வது உறுதியாகி விட்டது.

