பட்டர்வெர்த்தில் பாரதிதாசன் விழா 2026

அகல்யா
பட்டர்வொர்த், மே 21 –

​பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாவேந்தர் பாரதிதாசன் விழா வரும் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3:00 மணிக்கு, செபராங் ஜெயா, ஜாலான் தோடாக் அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று சங்கத்தின் செயலாளர் மா. மகேஸ்வரி கூறினார்.

​மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான ‘சொல்லின் செல்வர்’ டத்தோஸ்ரீ மு. சரவணன் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இலக்கியப் பேருரை ஆற்றுவார். அதே வேளையில், வடமலேசியாவின் முன்னணி இலக்கியச் செம்மல்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன், டாக்டர் சின்னையா இணையர், டத்தோ மரியதாஸ் கோபால், மேஜர் அட்ணன் உள்ளிட்ட தலைவர்களும், இலக்கியப் பிரியர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
​இலக்கியப் பேருரை, கவியரங்கம், இலக்கியப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, பாரதிதாசன் பாடல்கள், திரு.திருமாமணி தலைமையில் கவியரங்கம். பரதநாட்டியம் மற்றும் இலக்கியச் செம்மல் ஒருவருக்கு ‘பாரதிதாசன் விருது’ வழங்குதல் எனப் பல்வேறு சுவையான அங்கங்கள் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன.
​மேலும், வருகை தரும் அனைவருக்கும் பிற்பகல் தேநீர், இரவு உணவு மற்றும் இலக்கியச் சான்றிதழ் போன்றவையும் வழங்கப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் இவ்விலக்கிய விழாவிற்கு, அனைவரும் குறிப்பிட்டபடி பிற்பகல் 3:00 மணிக்குச் செபராங் ஜெயா, கருமாரியம்மன் ஆலய மண்டபத்திற்குத் திரளாக வருகை தந்து இலக்கிய இன்பம் நுகருமாறு செயலாளர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles