கிள்ளான் வேலி கால்பந்து கிளப் போட்டியில்கிள்ளான் வேலி கிளப் சாம்பியன்! சவுத் சிட்டிக்கு 2 ஆவது இடம்

சுங்கை பூலோ, ஜூலை 5-
கிள்ளான் வேலி கால்பந்து கிளப் ஏற்பாட்டில் சுங்கை பூலோ மெல்வூட் அரங்கில் வெட்ரன் கிண்ண கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ம இகா தொடர்பு குழு செயலாளர் சசிதரன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

வெட்ரன் கிண்ண கால்பந்து போட்டி பிரிவில் 10 குழுக்கள் மற்றும் இளையோர் பிரிவில் 4 குழுக்கள் பங்கேற்றது.

இதில் வெட்ரன் பிரிவில் கிள்ளான் வேலி கிளப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத் தையும் தட்டிச் சென்றது.

சவுத் சிட்டி கிளப் இரண்டாம் இடத்தைப் பிடித்து 2,000 வெள்ளி ரொக்கத்தை வென்றது.

சுங்கை பூலோ மெல்வூட் மற்றும் சிரம்பான் ராசா கிளப் 3,4 ஆவது இடங்களை பிடித்தது.

சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விலாயா மாநில அமைச்சர் ஹன்னா இயோ, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் ம இகா ஆதரவோடு இந்த போட்டி மிகப் சிறப்பாக நடைபெற்றது.

புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், மணப்பாறை புகழ் டி.என்.பி. சந்திரசேகரன், சுங்கை பூலோ குணா, பாஸ்கரன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

கிள்ளான் வேலி கால்பந்து கிளப் தலைவர் நாகராஜன், டாக்டர் ரவி, மோகன் ஆகியோர் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles