நார்வே-க்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் தோல்வி – கண்ணீருடன் ஓய்வுபெற்ற நெய்மர்..!

வாஷிங்டன் ஜூலை 6-
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பிரேசிலுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துப் தொடர் அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பிரேசில் – நார்வே அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 79ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஹாலண்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் நார்வே 1-0 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து 90ஆவது நிமிடத்தில் ஹாலண்ட் மற்றும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் நார்வே 2-0 என தொடர்ந்து முன்னிலையில் தொடர்ந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பிரேசில் வீரர் நெய்மர் பெனால்டி கிக் மூலம் ஒருகோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் நார்வே அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வியால் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐந்து முறை உலகக் கிண்ண சாம்பியன் பிரேசில் இம்முறை கால் இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது கடும் அதிர்ச்சியாகும்.

இதனிடையே இந்த உலகக் கிண்ண போட்டியோடு விடை பெறுகிறேன் என்று கோல்மன்னன் நெய்மார் கண்ணீருடன் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles