ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்! தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிபிபி கட்சி தீவிர பிரச்சாரம்

ஜொகூர் பாரு ஜூலை 5-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் 56 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜொகூர் மாநிலம் எப்போதும் தேசிய முன்னணி கோட்டையாகும்.

அந்த வகையில் இந்த தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற பிபிபி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ இண்டர் ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பல முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வரும் ஜூலை 11 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும்.

இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தேசிய முன்னணி கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல் பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles