லீகா புத்ரி கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது பினாங்கு இந்தியன் எஃப்சி!

கிளானா ஜெயா, ஜூலை 5-
எஃப் ஏ.எம். எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற லீகா புத்ரி கிண்ண கால்பந்து போட்டியில் பினாங்கு இந்தியன் எஃப்சி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை பினாங்கு இந்தியன் எஃப்சி குழு வெளிப்படுத்திய ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கடந்த வாரம் இறுதியில் கிளானா ஜெயா பி.கே.என்.எஸ். அரங்கில் லீகா புத்ரி கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பினாங்கு இந்தியன் எஃப்சி 3-2 என்ற கோல் கணக்கில் பெர்லீமா யுனைடெட் எப்சி கிளப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று பரிசளிப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சாம்பியன் பட்டத்தை வென்ற பினாங்கு இந்தியன் எஃப்சி குழுவுக்கு பரிசுகளும் 5,000 வெள்ளி ரொக்கப் மும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த பெர்லீமா யுனைடெட் எப்சி கிளப்புக்கு 3,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த போட்டியில்
Future FA மூன்றாம் இடத்தை பிடித்தது.

பினாங்கு இந்தியன் எஃப்சி வீராங்கனை தானுஸ்ரீ மொத்தம் 15 கோல்களை அடித்து சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.

ஐந்து ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பினாங்கு இந்தியன் எஃப்சி தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

லீகா புத்ரி கிண்ண கால்பந்து போட்டியில் பினாங்கு இந்தியன் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் பினாங்கு இந்தியன் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles