ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்!

ஜொகூர் பாரு ஜூலை 5-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜசெக இளம் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் போட்டியிடுகிறார்.

இவருக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இருப்பினும் இவர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்த மறுநிமிடமே கார்த்தியாயினி ஜெயபாலன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இவர் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது.

வாக்களிப்பு நடைபெற இன்னும் ஒரு வாரமே இருப்பதால் கார்த்தியாயினி ஜெயபாலன் வெற்றிக்கு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் கடும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles