ஜோ லோ-வின் பொதுமன்னிப்பு கோரிக்கை குறித்து மலேசியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்; அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர் மே 21-
1MDB ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.

மேலும் 1MDB ஊழல் விவகாரத்தில் செய்த குற்றங்களுக்காக, தலைமறைவான ஜோ லோ மன்னிப்புக் கோரியுள்ள முயற்சி குறித்து மலேசியா ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டும்.

ஜோ லோ, அமெரிக்காவிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது அமெரிக்கா தீர்மானிக்க வேண்டிய விஷயம், நாம் அல்ல என்றகிற பிரதமரின் கருத்துக்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லையென்றாலும்,
1MDB ஊழல் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும், விதிவிலக்கின்றி எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது எனது பார்வையில் மிகவும் அவசியம்.

1MDB ஊழலால் மலேசியா தலைமுறைகளைத் தாண்டிய பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இது நமது மக்களின் செல்வத்தையும், நமது நாட்டின் நற்பெயரையும் பறித்த ஒரு தேசிய அளவிலான பகற்கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், 2018-ல் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைத் தெரிவிக்க ஒரு தேசமே ஒன்று திரள வேண்டியிருந்தது. இந்தக் குற்றத்தின் சூத்திரதாரிகளையும், இதற்குத் துணைபோனவர்களையும் நீதியின் கதவுகளைத் தாண்டி சுதந்திரமாக நடமாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

பல ஆண்டுகளாக நீடித்த 1MDB வழக்கில், நீதிமன்றங்கள் இந்த விஷயத்தின் தீவிரத்தை மிகத் தெளிவாக.தீர்ப்பு வெளியிடுகையில், இந்த முழுத் தந்திரத்துக்கும் ஜோ லோ தான் மூளையாகச் செயல்பட்டார் என்ற வாதத்தைக் கையாண்டபோது,

நீதிபதி கொலின் செக்குவேரா, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும், 1MDB விவகாரங்களில் அப்போதைய பிரதமரின் “பதிலாள் மற்றும் இடைத்தரகராக” பணியாற்றிய ஜோ லோவுக்கும் இடையே “சந்தேகத்திற்கு இடமில்லாத பிணைப்பும் தொடர்பும்” இருந்ததாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் கூறினார்.

இது நமது நாட்டையும் தாண்டிய பரிவர்த்தனைகளை உள்ளடக்கியிருந்ததால், உலகளாவிய கவனத்தை ஈர்த்த ஒரு வழக்காகும். இந்த முழு வழக்கையும் ஒன்றிணைக்க, பல எல்லைகள் தாண்டிய விசாரணைகள் தேவைப்பட்டன.

இதன் காரணத்தினால்தான், அமெரிக்காவில், ஜோ லோவுக்கு எதிரான நடவடிக்கையானது, இப்போது பில்லியன் கணக்கான இழப்புகளுக்கு வழிவகுத்துள்ள முழு செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்பட வேண்டும். இந்த இழப்புகளுக்கு வரும் ஆண்டுகளில் மலேசியர்களாகிய நாம் தான் சுமக்க வேண்டியிருக்கும்.

இந்த உலகளாவிய சதித்திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள், அது தொடர்பாக இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்; அது மலேசியாவிலோ அல்லது அதற்கு வழிவகுத்த நிகழ்வுகள், அதிலும் குறிப்பாகக் குற்றச் செயல்கள் நடைபெற்ற உலகின் வேறு எந்தப் பகுதியிலோ நடக்கலாம்.

மேலும், மலேசியா இந்த விஷயத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

ஜோ லோ தனது குற்றச்சாட்டுகளை மலேசியாவில் எதிர்கொள்வதற்காகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.

இது தொடர்பாக நான் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்புவேன், இது விரிவாக விவாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இதை நான் பதிவு செய்கிறேன்.

கோபிந்த் சிங் டியோ
ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசியத் தலைவர்
இலக்கவியல் அமைச்சர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles