




கோலாலம்பூர், மே 21-
சமீபத்தில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி (ITEX) 2026இல், சிகாம்பூட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று பெருமைக்குரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மதிப்புமிக்கப் போட்டியில், 17 நாடுகளின் பங்கேற்புடன் கடும் போட்டி நிலவியது.
இதில் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட புத்தாக்கப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிப் பிரிவுகளில், உலக இளைஞர் கண்டுபிடிப்புக் கண்காட்சி (WYIE) பிரிவின் கீழ் கடும் போட்டி நிலவியது.
படைப்பாற்றல் புத்தாக்கம் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றது
சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி மூன்று குழுக்களை அனுப்பியது.
அவை அனைத்தும் புத்தாக்கப் பொருட்கள் மூலம் பதக்கங்களை வெற்றிகரமாக வென்றுள்ளன.
இதில் Mac portable purifier குழுவில் கலந்து கொண்ட மாணவர்கள்
நிரஞ்சனா சிவம்,
மனிஷா பிரித்தி ரவீந்திரன்,
தாரணி சாய் சரவணகுமார்,
சுருதிகா கரிகாலன்,
ரேவிந்தாரா இரபீந்திரன் மற்றும்
கிருபன் சந்திரநாதன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
அதேசமயம் Premium natural mosquito incense cones குழுவில் பங்கேற்ற மாணவர்கள்
திருஷ்வ ராஜ் யுகராஜ்,
விக்னஹரா நாகராஜா,
டிலக்க்ஷன் நாகராஜா,
தவீந்திர ராஜ் யுகராஜ் மற்றும்
ஆகார்ஷ் விஷ்வா மருது பாண்டியன் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
Cucumato Hydrogel Eye Patch குழுவில் பங்கேற்ற மாணவர்கள்
டிஷா நாயர் த/பெ தேவன் நாயர்,
டிவாஷன் விஜயகுமார்,
நிக்ஷயன் தனேஸ்வரன்,
வின்சன் ரேமன்
ஓம்குகன் தினகரன்,
வி.ப. சன்விகா த/பெ வி.எம். பழனிக்குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மேலும் jawatha special award என்ற சிறப்பு விருதையும் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி வென்றது.
இதனிடையே
விளையாட்டு துறையில் வெற்றி நடை போடும் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இப்போது சர்வதேச கண்டுபிடிப்பு, புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப துறையில் வெற்றி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று
Ybhg Datuk Dr.M.Shankar
Youth President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia
தெரிவித்தார்.
Ybhg Tuan Abdul Samad
President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia
தலைமையிலான பூளுஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கம் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் வெற்றிக்கு எப்போதும் பக்கப்பலமாக இருக்கும்.
அந்த வகையில் சர்வதேச கண்டுபிடிப்பு புத்தாக்க போட்டியில் மாணவர்கள் பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றிய ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.

