

கோலாலம்பூர் மே 23-
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்காக, ரூக்குன் தெத்தாங்கா பிரிக்பீல்ட்ஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் கலை வகுப்பு இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவரும் லெம்பா பத்தாய் கெஅடிலான் அரசியல் பிரமுகருமான
ஸ்டார் மணியம் தலைமையில் நடைபெற்ற இந்த சமையல் கலை வகுப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பல வகையான உணவுகளை சமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சமையல் கலை வகுப்பு பெண்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது என்று ஸ்டார் மணியம் தெரிவித்தார்.

