பரதன் கிண்ணத்தை வென்ற சிலாங்கூர் குழுவுக்கு பாராட்டு விழா!

கோலாலம்பூர் மே 24-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் குழு 4-3 என்ற கோல் கணக்கில் மலாக்கா குழுவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கூடுதல் நிமிடம் வரை அதாவது 120 நிமிடங்கள் வரை ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டி கோல் கணக்கில் சிலாங்கூர் வெற்றி பெற்றது.

சிலாங்கூர் குழு நிர்வாகி பிரேம் குமார் தலைமையில் நேற்று புக்கிட் கியாரா சிலாங்கூர் கிளப்பில் பாராட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு, மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை உதவித் தலைவர் டத்தோ பதி, முன்னாள் தேசிய ஆட்டக் காரர் ஜெயகாந்தன், சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் மு.சு.மணியம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றிகரமாக சிலாங்கூர் குழுவை வழிநடத்தி பரதன் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த நிர்வாகி பிரேம் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles