

பாலோ, ஜூலை 8-
நீண்ட காலமாக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவை செய்து வரும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகத்திற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்க இங்கு வந்துள்ளேன் என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
ஒரு மருத்துவராக இருந்து தற்போது அரசியலிலும் பணியாற்றும் ஒருவராக, மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றுவதில் உள்ள சவால்களையும் தியாகங்களையும் நான் நன்கு புரிந்து கொள்கிறேன்.
ஒரு மருத்துவர் அரசியலுக்குள் வரும்போதும் அவரது இலக்கு மாறுவதில்லை – மக்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் முன்னிலைப்படுத்துவதே அவரது உயர்ந்த நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.

