7 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் Bandar Springhill தமிழ்ப் பள்ளிக்கு திறந்த வெளி மண்டபம்!

லுங்குட், மே 24-
385 மாணவர்கள் பயிலும் பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக திறந்த வெளி மண்டபம் கட்ட வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.

அதன் தொடக்கமாக RM 750,000.00 செலவில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா சீரும் சிறப்பும் நடந்தேறியது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமாண பணி முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கான முதல் நிதியாக கடந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் மூலம் YTL நிறுவனத்திடமிருந்து RM 450,000.00 பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நெகிரி செம்பிலான் மாநில முதல்வரிடமிருந்து RM 30,000.00 வழங்கப்பட்டுள்ளது என்று அருள் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து நிதி உதவிகள் மாநில அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் பல நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது..

ஆனால், குறிப்பிட்ட கால கட்டத்தில் அனைத்து விண்ணப்பத்தையும் ஈடுகட்ட வேண்டும் என்றால் சுலபம் இல்லை.

ஆகவே, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நிதியுதவி மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நிலமையை மாற்றியமைத்து மாணவர்களுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்ப்படுத்தி தர முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles