விளைபயன்மிகு பேச்சுக்கலை பயிலரங்கில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அபாரம் !

கோலாலம்பூர் மே 22
Pertubuhan Bitara Wawasan இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பள்ளியில் இருந்து 62 மாணவர்கள் பங்கு பெற்ற விளைபயன்மிகு பேச்சுக்கலை என்னும் பயிலரங்கம் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் இரு தினங்களாக மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கை ரவாங்யை சேர்ந்த Achievers Mind Academy மற்றும் அவர்களது அரசு சாரா இயக்க குழுவினர்கள் சிறப்பாக நடத்தினர்.

தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் தன்னம்பிக்கை மற்றும் தயக்கம் இன்றி மேடை பேச்சு திறன் மேம்பாடு காண நடத்தப்பட்ட இந்த அருமையான நிகழ்வின் நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை அதே மண்டபத்தில் நிறைவடைந்தது.

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் குயில் பத்திரிகை ஆசிரியரும் , நாடறிந்த ஜெய பக்தி நிறுவனத்தின் இயக்குநருமான டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினார் .

செந்தூல் முத்தமிழ்ப் படிப்பகம் தலைவர் பி.இராமன், பிந்தாரா வாவாசன் இயக்கத்தின் தலைவர் ஆசிரியர் சுப்ரமணியம், Achievers Mind Academy ஸ்தாபகர் மாஸ்டர் அழகன் கோவிந்தன், Dato Dr samaran rstniam
(Managing director vision group of companies) உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பேச்சில் பயத்தைச் சமாளித்து நம்பிக்கையை வளர்த்தல், தெளிவான செய்தியை கட்டமைத்தல், கட்டமைக்கப்பட்ட பேச்சை எவ்வாறு ஒழுங்கமைப்பது, கதை சொல்லுதல் திறனை வெளிப்படுத்துதல் போன்றவை இந்த
பயிற்சி பயிலரங்கில் கற்று தரப்பட்டது.

இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் நிறைவு விழாவில் தங்களது பேச்சு திறன் கலையை வெளிப்படுத்தி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles