தேசிய புற்று நோய் கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்!

கோலாலம்பூர் ஜூன் 2-
தேசிய புற்றுநோய் கழகத்தின் 60 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் ஜூன் 6,7 ஆம் தேதிகளில் Bangunan Persatuan Kanser Kebangsaan Malaysia (NCSM) 66, Jalan Raja Muda Abdul Aziz, 50300 Kuala Lumpur என்ற இடத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது.

காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

இந்த மருத்துவ முகாமில் வெறும் RM 6 செலுத்தி
நுரையீரல் புற்றுநோய்,
பெருங்குடல் புற்றுநோய்,புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்று நோய் & கல்லீரல் புற்று நோய் மீதான சோதனைகளை மேற்கொள்ளலாம்.

வயோதிக வயதினர்,குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டவர்கள் & புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

உடல் ஆரோக்கியம் மீதான பேச்சு & நடவடிக்கைகளும் உண்டு.

ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கலாம்.

பதிவுக்கு:முழு பெயர், அடையாளக் கார்டு, தொலைபேசி எண்.
QR வழி RM 6 செலுத்தலாம். அல்லது அன்றைய தினமும் செலுத்திக் கொள்ளலாம்.

சிலாங்கூர் மாநில பலாக்கோங் சட்டமன்ற தொகுதியும் இணைந்து செயல்படுவதால் பெயர்களை முன் கூட்டியே திருமதி சரளாதேவி (பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி – தமிழ் நேசன் முன்னாள் பத்திரிகையாளர்) அவர்களை 017 – 6236130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles