
கோலாலம்பூர் ஜூன் 2-.
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைப்பட்ட நிலையில் இன்னும் 60 நாட்களில் புதிய தேர்தல் நடத்தப்படுகிறது.
இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி தனித்தனியாக போட்டியிடுகிறது.
அதேசமயம் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி 56 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் மூடா மற்றும் MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியும் இடம் பெற்றுள்ளன.
பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் இந்த கூட்டணியில் பலம் வாய்ந்தவை.
அந்த வகையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய அரசியல் வரலாற்றில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி முதல் முறையாக ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.
கண்டிப்பாக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன் தெரிவித்தார்.

