நெகிரியில் ம இகா வெற்றி பெற கடுமையாக உழையுங்கள்! டத்தோஸ்ரீ சரவணன் வேண்டுகோள்

சிரம்பான் ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ம இகா போட்டியிடுகிறது.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ தினாளன் ராஜகோபால் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் அச்சுதன் போட்டியிடுகிறார்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் ம இகா வெற்றி பெற்றது.

இப்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ம இகா போட்டியிடுகிறது.

ஜொகூர் மாநில தேர்தல் வேறு. நெகிரி மாநில சட்டமன்றத் தேர்தல் வேறு.

நெகிரியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கு பெருமை.

தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் வெற்றி பெற்று நாம் தோல்வி கண்டால் அது பாதிப்பை கொண்டு வரும்.

ஆகவே இரண்டு தொகுதிகளில் ம இகா வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்கும் படி அவர் ம இகா உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மாநில ம இகா மண்டபத்தில் ம இகா தலைவர்கள் முன்னிலையில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles