நெகிரி மந்திரி பெசார் வெற்றிக்கு கைகொடுக்கப் போகும் இந்தியர் வாக்குகள்!

லிங்கி, ஜூலை 22-.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண்.

கடந்த நான்கு தவணைகள் சிக்மாட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் இம்முறை லிங்கி சட்டமன்றத் தொகுதியில் இளம் இறங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு லிங்கி மற்றும் ஸ்ரீ தஞ்சோங் உள்ளது.

கடந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்
முகமது ஃபைசல் ராம்லி, பெர்சத்து வேட்பாளரை 1,461 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

பி.என்-இன் கோட்டையான இத்தொகுதியில் தற்போதைய பதவியில் இருப்பவருக்கு சவால் விடுவதன் மூலம், டத்தோஸ்ரீ அமினுடின் மிகவும் துணிச்சலாக களம் இறங்கி உள்ளார்.

இருப்பினும், அரசியல் ஆய்வாளர்கள் இத்தொகுதியை ஒரு கடுமையான போட்டியாகக் கருதுகின்றனர்.

இந்த தொகுதியில் நெகிரி மந்திரி பெசார் வெற்றிக்கு இந்திய வாக்காளர்கள் கைகொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்களுக்கு பல வகைகளில் பெரும் உதவிகளை இவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles