மற்ற சமயத்தை அவமதித்து கேலி படுத்தும் அம்னோ பேராளரின் செயல் கண்டிக்கத்தக்கது

கிள்ளான் செப் 16- கடந்த அம்னோ பேராளர்கள் கூட்டத்தில்  கத்தோலிக்க குருவையும் கன்னியாஸ்திரியையும் இலக்காகக் கொண்டு UMNO பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட இழிவுபடுத்தும் “நகைச்சுவையை” வனிதா கெ அடிலான் மிகக்கடுமையாக கண்டிக்கிறது.

இது வெறும் தவறுதலாக வெளிப்பட்ட வார்த்தை அல்ல. கத்தோலிக்கசமூகத்தினருக்கு ஆழ்ந்த மனவேதனையையும், பொறுப்புணர்வுள்ள அனைத்து மலேசியர்களிடமும்கடும் அதிருப்தியையும் ஏற்படுத்திய திட்டமிட்ட, அவமரியாதையான செயல் இது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், இன்னும் ஆழமான ஒருபிரச்சினையை வெளிப்படுத்துகிறது.

அம்னோவில் சிலர் காலத்துக்கு ஒவ்வாத இனமற்றும் மத அரசியலில் சிக்கிக் கொண்டு, நாட்டின் உண்மை நிலைமையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றிருப்பது தெளிவாகிறது.

மக்கள் அன்றாட வாழ்க்கையில் உணவுக்கும், தங்கள்  குடும்பங்களைமுன்னேற்றவும், வளமான மலேசியாவை உருவாக்கவும் கடுமையாகஉழைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சிலரின் அரசியல் சிந்தனைகளும் விவாதமும் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதை காட்டுகின்றது.மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம்அல்லது சமூக நலன் குறித்து கொள்கை ரீதியான விவாதங்களை நடத்துவதற்கு பதிலாக,ஆக்கபூர்வமானஉள்ளடக்கம் இல்லாததை மறைக்க மலிவான மற்றும் அருவருக்கத்தக்க மத கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

 மலேசியாவின் பன்முகத்தன்மையே நமது மிகப் பெரிய பொருளாதாரமற்றும் சமூகச் சொத்து என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி, பிற மதங்களையும் சமூகங்களையும் அரசியல் ஆதாயத்திற்காக கேலிக்குரிய இலக்குகளாக மாற்றும் பிற்போக்கானஅரசியலில் அவர்கள் சிக்கியுள்ளனர்.நமது பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

இனங்களும் பல சமயங்களும் கொண்ட நமது சமூகத்தின் அமைதியானசகவாழ்வு, அரசியல் மேடையில் மலிவான சிரிப்பைப் பெறுவதற்காககேலிக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

மதமும் நம்பிக்கையும் புனிதமானவை. எந்த ஒரு மதத்தையும்சார்ந்த மதிப்பிற்குரிய நபர்களை இழிவுபடுத்துவது, நமது தேசிய ஒற்றுமையின்அடித்தளத்தையே அச்சுறுத்துகிறது.உடனடி நடவடிக்கை அவசியம்.

ஒருசிலரின் மதவெறி மற்றும் பொறுப்பற்ற செயல்கள் நமது நாட்டைபின்னோக்கி இழுத்துச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

எனவே, வனிதாகெ அடிலான் பின்வரும் நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது:

உடனடி காவல்துறை விசாரணைஇந்தச் சம்பவம் தொடர்பாக மலேசியக் காவல்துறை (PDRM) விரைவானதும்முழுமையான துமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எந்த ஒரு மதத்தையும் பகிரங்கமாக இழிவுபடுத்தும் செயல்களும்சகிப்புத்தன்மை இன்றி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அம்னோ தலைமைத்துவம் பொறுப்பேற்க வேண்டும்.

அம்னோ தலைமைத்துவம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்டபிரதிநிதிக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், கிறிஸ்தவ சமூகத்திடம் எந்தவித நிபந்தனையும் இன்றி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

மௌனமாக இருப்பதும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் இந்தச் செயலுக்கு மறைமுக ஆதரவாகவே அமையும்.

வனிதா கெ அடிலான், மலேசியாவின் அமைதி, மரியாதை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் அனைத்து மலேசியர்களுடனும் உறுதியாக நிற்கிறது.

இன,  சமய அரசியலை விட்டு, நவீன மலேசியாவை உருவாக்குவதற்கான உண்மையான பணியில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

சங்கீதா ஜெயகுமார்
செயலாளர்,
வனிதா
கெஅடிலான் கட்சி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles