KLSICCI – இல் 23 ஆண்டுகள் சேவையை முன் வைத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வி.கே.கே. இராஜசேகரன்

கோலாலம்பூர், ஜூன் 8–
வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ள Kuala Lumpur & Selangor Indian Chamber of Commerce and Industry (KLSICCI) அமைப்பின் 2026–2028 காலத்திற்கான தலைவர் பதவிக்கு வி.கே.கே. இராஜசேகரன் தன்னை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை பல ஆண்டுகள் வெற்றிகரமாக வழிநடத்திய டத்தோ வி.கே.கே. தியாகராஜனின் புதல்வர் வி.கே.கே.இராஜசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல்எஸ்ஐசிசிஐயுடன் 23 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வரும் அவர், “From Legacy to Leverage” (பாரம்பரியத்திலிருந்து புதிய வாய்ப்புகளுக்கு) என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளார்.

இந்த முழக்கம், அமைப்பின் வளமான பாரம்பரியத்தையும் செல்வாக்கையும் உறுப்பினர்களுக்கான நடைமுறை நன்மைகளாக மாற்றும் அவரது நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

இராஜசேகரன் கூறுகையில், கடந்த காலங்களில் கேஎல்எஸ்ஐசிசிஐ இந்திய வணிக சமூகத்தின் முக்கிய குரலாகவும், தொழில் வலையமைப்புகளை உருவாக்கும் மையமாகவும், தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டும் அமைப்பாகவும் விளங்கியது என்றார்.

இன்றைய வணிகச் சூழலில் அதிகரித்துள்ள போட்டி, செயல்பாட்டு செலவுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் காரணமாக, வணிகச் சங்கங்கள் வெறும் நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளாக அல்லாமல், உறுப்பினர்களுக்கு வணிக வாய்ப்புகள், நிதி உதவிகள், புதிய சந்தைகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்கித் தரும் அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவரது முக்கிய முன்னுரிமைகள் பின் வருமாறு:

1) அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களுடன் (GLC) உறவுகளை வலுப்படுத்துதல்.

2)உறுப்பினர்களுக்கு அதிகமான வணிக வாய்ப்புகளை உருவாக்குதல்.

3) இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (SME) மேம்படுத்துதல்.

4) தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவுதல்.

5)உறுப்பினர்களின் தேவைகளுக்கு நெருக்கமான, செல்வாக்கு மிக்க மற்றும் பொருத்தமான அமைப்பாக கேஎல்எஸ்ஐசிசிஐயை மாற்றுதல்.

இனியும் கடந்த கால வெற்றிகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. நமக்குள்ள பாரம்பரிய வலிமையை எதிர்கால தலைமுறை தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.

அதுவே ‘From Legacy to Leverage’ என்ற முழக்கத்தின் உண்மையான நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.

தனக்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், கேஎல்எஸ்ஐசிசிஐயை மீண்டும் வலிமையான, செல்வாக்கு மிக்க மற்றும் உறுப்பினர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் அமைப்பாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இவர் கடந்து வந்த பாதைகள் -Leadership Journey*

2003- Pioneer and Founder YES
2004-2006 YES Comm Chair
2010-2012 YES Comm Chair
2012-2014 Hon Sec Gen
2014-2016 Vice President
2016-2018 Deputy President
2018-2019 Deputy President
2022-2024 Deputy President
2024-2026 Council Member.

இவரின் வர்த்தக வரலாறு – Business Profile*

MD – VKK Diversified Holdings SB
Director – VKK Estates SB
Director – VKK Hotels & Resorts SB
Director – Tutto Bene SB
Director – Padu Pixel SB

கேஎல்எஸ்ஐசிசிஐயின் 2026–2028 காலத்திற்கான புதிய நிர்வாகத் தேர்தல் ஜூன் 14ஆம் தேதி தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வணிக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய போட்டிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இம்முறை வி.கே.கே இராஜசேகரன் அணி மற்றும் பிரபாகரன் அணி முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles