

ஜொகூர் பாரு ஜூன் 8-
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இனி எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்.
இந்நிலையில் இவ்விரு மாநிலங்களில் தேசிய முன்னணி வெற்றிக்கு பிபிபி கட்சி கடுமையாக உழைக்கும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இவ்விரு சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி மிகவும் முக்கியமானது.
அந்த வகையில் நாடு தழுவிய அளவில் பிபிபி கட்சியின் உறுப்பினர்கள் களம் இறங்கி தேசிய முன்னணிக்கு தீவிர பிரச்சாரம் செய்வார்கள்.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பிபிபி விருப்பம் தெரிவித்துள்ளது.
இரண்டு தொகுதிகளை கேட்டு இருக்கிறோம்.
இதை தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் விட்டு விடுகிறோம் என்று அவர் சொன்னார்.
தேசிய முன்னணி தேர்தல் பிரச்சாரம் இயந்திரத்தை நேற்று ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோ டாக்டர் லோகபாலா இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

