


ஈப்போ ஜூலை 25-
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தேசிய திருமுருகன் மாநாடு இன்று
ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் மிகவும் விமரிசையாக தொடங்கியது.
பேராக் மாநில அரசு மற்றும் ஈப்போ இந்து தேவஸ்தான பாரிபாலன சபா (IHDPS) இணைந்து இந்த தேசிய திருமுருகன் மாநாட்டை நடத்தியது.
இன்று சமய இசை கச்சேரி இன்னிசை விழாவுடன் விழா தொடங்கியது.
முருகப்பெருமான் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் பக்தி இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் அவர்கள் பெரும் முயற்சியால் இந்த தேசிய திருமுருகன் மாநாடு புதிய சகாப்தம் படைத்தது.
முருகப் பெருமானின் ஆசியோடு தேசிய திருமுருகன் மாநாட்டை திட்டமிட்டப்படி நடத்தி காட்டுவேன் கூறிய டத்தோ சிவநேசன் இறுதியில் சொன்னதை செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

