இனவாத பேச்சுக்கு டாக்டர் சத்ய பிரகாஷ் கடும் கண்டனம்; போலீஸ் விசாரணை அவசியம் என வலியுறுத்தல்

சுவா, ஜூலை 25 –

பெரிக்காத்தான் நேஷ்னலின் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட இனவாத கருத்துகளுக்கு சிலாங்கூர் மாநில தேர்தல் அமைப்பின் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுவா–புக்கிட் பெலாண்டோக் பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக தாம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், நாடு முழுவதும் பலரும் இதே விவகாரம் தொடர்பாக புகார்கள் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

3R (இனம், மதம், அரச குடும்பம்) தொடர்பான உணர்வுபூர்வமான விவகாரங்களில் கருத்து தெரிவித்துள்ளதால், சனுசி மீது முழுமையான போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தின் மூலம் யார் இனவாத அரசியலை முன்னிறுத்துகிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, மலாய் வாக்குகளைப் பெறும் நோக்கில் பிற இன மக்களை தாக்கும் அரசியலை மக்கள் ஆழமாக சிந்தித்து, அதன் பின்னரே தங்களது வாக்கை செலுத்த வேண்டும்,” என்று டாக்டர் சத்ய பிரகாஷ் கூறினார்.

இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் சுவா சட்டமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ இயூ பூன் லை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, பிரதமர் துறையின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன் ஆகியோர்
கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles