DAP கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதைவிட, முதலமைச்சர் பதவியை ஏற்காமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்

டத்தோ ஸ்ரீ ஓன் ஹபிஸ் காஸி
ஜொகூர் மாநில அண்மைய மேனாள் மந்திரி பெசார்

டத்தோ ஸ்ரீ அவர்களே,

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நான் மீண்டும் உங்களோடு பகிர்கிறேன்.

DAP தேசிய தலைவரோடு, அதே மேசையில் அமர்ந்திருந்தவர் நீங்கள்!

தேசிய DAP தலைவருடன் கைகுலுக்கி, புன்னகையோடும் பரஸ்பர மரியாதையோடும் கலந்துரையாடிக் கொண்டிருப்பதும் நீங்களே!

MITEC-இல் நடைபெற்ற ஆசியான் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை முன்னிட்டு DAP தேசியத் தலைவரைச் சந்தித்துப் பாராட்டி, அன்போடு நினைவுப் பரிசு வழங்கியவரும் நீங்கள் தான்!

இதில் எது நிஜம்? இந்தப் புகைப்படங்களா அல்லது வன்மத்தில் நீங்கள் வெளியிட்ட அறிக்கையா? இதில் எது உண்மை?

ஒவ்வொரு முறை தேர்தல் நெருங்கும் போதெல்லாம் DAP கட்சியை அரசியல் ஆதாயத்திற்கான பகடைக் காயாகப் பயன்படுத்தியது போதும்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு DAP-யை ஒரு பயமுறுத்தும் சக்தியாக மக்களிடம் சித்தரித்தனர். இன்றும் கூட அதே பழைய அரசியல் கதையே தொடர்கிறது

ஜொகூர் மக்களே, உங்கள் பார்வைக்கு அந்தப் புகைப்படங்களை இங்கு பதிவு செய்கிறேன். அவற்றைப் பாருங்கள்! நீங்களே மதிப்பிடுங்கள்!

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை தான். ஆனால், இவரின் சொல்லும் செயலும் முரண்பட்டிருப்பது, இவரின் நேர்மையையும், தலைமைத்துவ நம்பகத்தன்மையையும் சந்தேகிக்க வைக்கிறது. ”

மலேசிய வரலாற்று அரசியலில், DAP அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை களமாடிக் கொண்டிருக்கிறது.

மூத்த கட்சிகளில் ஒன்றான DAPயோடு அனைவரும் ஒத்தூத வேண்டும் என்று சொல்லவில்லை.

ஆனால், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக வாக்காளர்களை அச்சுறுத்தும் கருவியாக DAP-யை பயன்படுத்துவது நியாயமல்ல என்பதை முன்வைக்கிறோம்!

Mandeep Singh,

Pegawai Khas kepada Menteri Digital & Pengerusi Kebangsaan DAP

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles